ராஜஸ்தானின் சிகாரில் அசோக் யாதவ் என்பபவர் தனது 5 மாத இரட்டை பெண் குழந்தைகளை தரையில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆண் குழந்தையை விரும்பியதாகவும், மாறாக இரட்டை பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் இத்தகைய செயலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாய் மாமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, குழந்தைகளை கொன்ற அப்பாவை கைது செய்தனர்.