தெருநாய் தொல்லை - காங்., எம்பி பிரதமரிடம் மனு

67பார்த்தது
தெருநாய் தொல்லை - காங்., எம்பி பிரதமரிடம் மனு
இந்தியாவில் தெருநாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், இன்று பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன. உலகில் நிகழும் ஒட்டுமொத்த ரேபிஸ் மரணங்களில் இந்தியாவில் 36% பதிவாகியுள்ளது. அதிகரித்து வரும் தெருநாய் பிரச்னையை எதிர்கொள்ள தேசிய நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி