நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நிலநடுக்க நிவாரண பணிகளில் மியான்மர், தாய்லாந்துக்கு இந்தியா உதவ தயார் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மியான்மர், தாய்லாந்துடன் இந்திய வெளியுறவுத்துறை தொடர்பில் இருப்பதாகவும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.