இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாட உள்ள நிலையில் அதிரடி உத்தரவை உத்தரப்பிரதேச மாநில அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி சாலைகளில் நமாஸ் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. மீறுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மதக்குருமார்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.