வேலூர்: பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கம்

58பார்த்தது
வேலூர்: பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கம்
வேலூர் குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் ஊராட்சி ராஜாகோவில் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டுமென பல ஆண்டுகளாக பெற்றோர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியகுழு உறுப்பினர் வி. சோபன்பாபு, ஊராட்சி மன்ற உறுப்பினர் சதீஷ்காந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என். இ. சத்யானந்தம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய மாணவரணி ஆர். ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி