ராணிப்பேட்டை: ரயிலின் இன்ஜின் கழன்றதால் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் அருகே திப்ருகாரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் முகுந்த ராயபுரம் திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்ஜினையும், இதரபெட்டிகளையும் இணைக்கும் ராடு உடைந்ததால், ரயில் சுமார் 1 மணிநேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வழியாக செல்லும் ரயில்களும் ஆங்காங்கே வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர், மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ரயில் பெட்டிகளை இணைத்து ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.