சேரும் சகதியுமான சாலைகளால் பொதுமக்கள் அவதி!

50பார்த்தது
மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த பணிகளின் காரனமாக வேலூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

அதாவது, வேலூர் மாநகராட்சி 33வது வார்டு வசந்தபுரம், கே. கே. நகர் உள்ளிட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் மாநகராட்சி பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. கழிவு நீர் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆங்காங்கே மூடப்படாமலும், பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் சாலையை சீரமைக்காமலும் கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால், சாலையில் நடக்க முடியாத அளவிற்கு உள்ளது தற்போது மழைக் காலம் என்பதால் சேறும் சகதியுமாக தெருக்கள் உள்ளது.

ஆகவே, பாதாள சாக்கடைக்கா தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி