பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான அரசாணை ரத்து

85பார்த்தது
*பட்டியலிட பெண் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான அரசாணை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்ததால் பரபரப்பு. *


திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அந்தப் பகுதி பட்டியலின பெண்ணுக்காக ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த இந்துமதி பாண்டியன் என்பவர் தேர்தலில் போட்டியிட மனு அளித்ததை தொடர்ந்து வேறு யாரும் போட்டியிடாத நிலையில் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் முடிவுகள் வெளியானது.

ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கூட இல்லாத நிலையில் நாய்க்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியல் இனப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என வழக்கு தொடர்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி