வேப்பங்கொட்டை சாறு இயற்கையான பூச்சி விரட்டியாகும். இதில் எந்த வித ரசாயனமும் இல்லை. இந்த சாறை தெளிப்பதால் பயிரின் வாசனை மாறி விடுகிறது. முட்டையிடுவதற்காக வரும் பூச்சிகள் பயிரை கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி போகும். வேப்பங்கொட்டை சாறு தெளிக்கப்பட்ட இடத்தில் பூச்சிகளால் பசையை சுரக்க இயலாது. பசை இல்லாததால் இலை பரப்பின் மீது முட்டைகள் ஒட்டுவதில்லை. எனவே பூச்சிகளில் இருந்து பயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.