பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கின் விசாரணையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்திருந்தார். இதனை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரச்னையில் முற்றிலும் உணர்பூர்வமற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.