உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (மார்ச் 27) தொடங்குகிறது. ஆண்கள், பெண்கள் ஒற்றையர், ஆண்கள், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. 20 நாடுகளை சேர்ந்த 192 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் சரத் கமல், சத்யன், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா உள்ளிட்ட 30 இந்திய வீரர், வீராங்கனைகளும் அடங்குவார்கள். மொத்தம் ரூ.2.35 கோடி பரிசுத் தொகைக்கான இந்த சர்வதேச போட்டி நடைபெறுகிறது.