தென்மண்டல எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. புதிய வாடகை ஒப்பந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக இன்று (மார்ச். 27) மாலை 4 மணிக்கு கோவையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.