பெண்கள் தினந்தோறும் மஞ்சள் தேய்த்து குளிப்பதால் உடலில் முடி தோன்றாமல் இருப்பது மட்டுமின்றி தோலில் பாதிப்பு உண்டாகாமல் 'பளபள'வென ஜொலிக்கும். முகப்பருக்கள், வெயில் காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளுக்கு மஞ்சள் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். மஞ்சள் பூசி முகத்தை கழுவிய பின்பு நன்கு துடைக்கவும். சருமத்தைப் பராமரிக்கும் போது நம் முகத்தை நன்கு கழுவுவது மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.