
போளூரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி மூலம் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் போளூர் 18 வார்டுகளை உள்ளடக்கிய பேரூராட்சி பகுதியாகும். இப்பகுதியில் சுமார் 30,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகரில் உள்ள பகதூர் தெரு, ரோஷன் நகர், டிரைவர் கோட்டைமேடு பகுதி உள்ளிட்ட 18 வார்டுகளிலும் இன்று கொசு மருந்து அடிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.