போளூர் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.

70பார்த்தது
வேலூா்-திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நெடுஞ்சாலைத்துறை உள்கோட்டத்தில் உள்ள மாநில சாலையான கடலூா்-சித்தூா் சாலை மற்றும் போளூா்-ஜமுனாமரத்தூா் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகள் இருந்தன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் ஆா். கிருஷ்ணசாமி ஆலோசனையின்பேரில், கோட்ட பொறியாளா் பி. ஞானவேல் வழிகாட்டுதலின்படி, போளூா் உதவிகோட்ட பொறியாளா் திருநாவுக்கரசு தலைமையில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே 2-ஆவது நாளாக 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், உதவி பொறியாளா் வேதவள்ளி, நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி