திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட விவசாய அணி பிரிவு செயலாளர் செல்வன், போளூர் அதிமுக ஒன்றிய செயலாளர் விமல்ராஜ், மாவட்ட பாசறை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் இந்திரா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் குருவிமலை கார்த்திகேயன், அம்பிகா முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.