திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி இவர் தனது மனைவி ராணி கடந்த வருடம் 2023 இறந்து விட்டதால் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமக்கடன் மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூபாய் 22, 500 பெறுவதற்காக போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில் கொழாவூர் கிராம உதவியாளர் இயற்கை மரணத்திற்கான பணம் பெற வேண்டும் என்றால் தனக்கு 1500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கிராம நிர்வாக உதவியாளர் ராஜேந்திரன் மனுதாரர் நாராயணசாமி நிர்பந்தித்துள்ளார் இந்நிலையில் லஞ்சப்பணம் கொடுக்க விருப்பமில்லாத புகார் நாராயணசாமி இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொழாவூர் கிராமத்தில் 1500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக உதவியாளர் ராஜேந்திரன் கையும் களவுமாக பிடித்து கைது செய்து போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக உதவியாளர் ராஜேந்திரன் கைதான சம்பவம் வருவாய்த்துறையினரிடையே பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்ப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. *