திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மசூதி அருகே இன்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது எஸ்டிபிஐ கட்சியினர் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் போளூர் காவல் ஆய்வாளர் அல்லிராணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.