கலசபாக்கம் - Kalasapakkam

தி.மலை: ரூ.4 கோடி மதிப்பீட்டில் தொழில்பயிற்சி மைய கட்டடம்

தி.மலை: ரூ.4 கோடி மதிப்பீட்டில் தொழில்பயிற்சி மைய கட்டடம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாகப்பாடி பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் மாணவா்கள் பயன்பாட்டுக்காக தமிழக அரசு மூலம் கல்லூரி வளாகத்தில் ரூ. 4 கோடியே 80 லட்சத்தில் தொழில்பயிற்சி மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் சுரேஷ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ. , பெ. சு. தி. சரவணன் பூமி பூஜையில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கிவைத்துப் பேசினாா். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பவ்யா ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சுப்பிரமணி (நாகப்பாடி), ஜெயந்தி சீனு (காரப்பட்டு), முன்னாள் தலைவா் இளங்கோவன், அரசு ஒப்பந்ததாரா் சங்கா் உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை