திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் கடந்த 15-ஆம் தேதி தொடர் மழையின் காரணமாக நீர் நிரம்பியிருந்த வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பில்லர் குழியில் தவறி விழுந்து மூழ்கி மரணமடைந்த 10-வயது சிறுவன் பார்த்திபனின் தாயாரிடம் தமிழ்நாடு அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4. இலட்சத்திற்கான சான்றிதழை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி அச்சிறுவனின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் மனோகரன், செந்தில்குமார்,
வட்டாட்சியர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் சீதா, கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், கமலஹாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கிளைக் கழக செயலாளர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.