60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு நோய்கள் உள்ள பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விதித்துள்ளது. மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால் உடல் பருமனாக உள்ள மற்றும் இதய நோய் கொண்ட பக்தர்கள் மலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.