டாஸ்மாக் ஊழுல் குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொடூர மதுவின் மூலம் கூட ஊழலை நடத்திகாட்டி, அந்த ஊழல் வெளிவந்த பிறகு, அதை மூடி மறைக்க நினைக்கும் அதிகாரவர்கத்தின் ஆணவத்திற்கு எதிராகவும், மதுவின் தீங்கிற்கு எதிராகவும் மக்களின் போராட்டம் தொடரும். மது, போதை, ஊழல் இல்லாத புதிய தமிழகத்தை மக்கள் சக்தியோடு சேர்ந்து விரைவில் உருவாக்குவோம்!” என குறிப்பிட்டுள்ளார்.