திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் இன்று (மார்ச். 16) தனது 65வது வயதில் காலமானார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியாகவும் இருந்து வந்தார். வங்கி அதிகாரியாகப் பணியாற்றி வந்த நாறும்பூநாதன் தர்சனா நிஜ நாடக இயக்கம், ஸ்ருஷ்டி வீதி நாடக அமைப்புடன் இணைந்து நாடக இயக்கம் சார்ந்த பணிகளை முன்னெடுத்தார். இவர் முற்போக்கு இலக்கியம் சார்ந்து இயங்கி வந்தார்.