தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அனல் மின் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின் ஒயர்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. அதேபோல குளிரூட்டும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மின் கம்பிகளும் எரிந்தன. விபத்து காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.