அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. மாடு முட்டியதில் இளைஞர் பலி

75பார்த்தது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. மாடு முட்டியதில் இளைஞர் பலி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஸ் பாண்டியன் (22) என்பவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எம்.காம் பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் பணியாற்றி வந்துள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்த நிலையில் இன்று மாடுமுட்டி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி