பழங்களின் ராஜா மாம்பழம் என்றால் பழங்களின் ராணியாக மங்குஸ்தான் அறியப்படுகிறது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழம் தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும். மங்குஸ்தான் பழம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. கண் நரம்புகளை பலமாக்கும் இப்பழம் தோல், பற்களின் ஈறு நோய்கள், பல்வலி, நாட்பட்ட புண்களுக்கும் பயனளிக்கும்.