விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த சீனிவாசன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொரவி என்ற பகுதியில் மதுபாட்டில்களை கடத்திய நபர்களை பிடிக்க விரட்டிச் சென்ற போது காவலர் சீனிவாசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் மயங்கி விழுந்துள்ளார். இதை தொடர்ந்து அவரின் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.