உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கல்லூரி பேராசிரியர் ரஜ்னீஷ்குமார் (54) என்பவர் பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து ரஜ்னீஷ்குமார் தலைமறைவாகியுள்ளார். இவர் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த 59 வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல ஆபாச வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் கூறியுள்ளனர்.