வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சில முக்கிய விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் உங்களது வாழ்க்கையில் நல்ல பலன் மற்றும் நிம்மதியான வாழ்க்கையை பெறுவீர்கள். அதன்படி உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிலவ விரும்பினால் உங்களது வீட்டின் வடக்கு திசையில் லட்சுமி தேவியின் படத்தை வைக்க வேண்டும். தினமும் வீட்டில் சிவன் மற்றும் சந்திரனின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்ய தொடங்கும் போது உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்கும்.