திருமணம் ஆகாமலேயே பிறந்த குழந்தை.. தாய் பால் இல்லாததால் பலி

50பார்த்தது
திருமணம் ஆகாமலேயே பிறந்த குழந்தை.. தாய் பால் இல்லாததால் பலி
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, திருமணம் ஆகாமலேயே அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானமாக இருக்கும் என்பதால் இதுகுறித்து மருத்துவமனை காவலாளியிடம், கூறியுள்ளார். உடனே அவர், தனக்கு தெரிந்த தம்பதிக்கு தத்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்பெண்ணும் சம்மதித்த நிலையில், குழந்தையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார். அந்த குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வழியில்லாமல் போனதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி