உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக இன்று(செப்.9) உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்வாசகம், வட்ட தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் வெற்றிவேல், பொருளாளர் சையது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத் தொடர்ந்து டிஜிட்டல் கிராப் சர்வே பணி தொடர்பாக உபகரணங்கள் மற்றும் மதிப்பூதியம் வழங்காதது, கிராப் சர்வே பணிக்கென தன்னார்வலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நிர்வாகிகள் பேசினார்கள். நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் தலைவர் ரவி, செயலாளர் சீனிப்பாண்டி உள்ளிட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி