திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் வரி சொத்து வரி உள்ள அனைத்து வரி இனங்களை விரைவாக கட்ட வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரிவிக்கப்பட்டது.