ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் உருவாக்கப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று (ஏப்ரல். 06) திறந்து வைக்கவுள்ளார். ரூ.8,300 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டப் பணிகளையும் தொடங்கிவைக்கிறார். ராம நவமியை முன்னிட்டு நாட்டுக்கு அந்த பாலத்தை பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார். புதிய பாலத்தை திறந்து வைக்க உள்ள அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது. பாம்பன் பாலம் போலவே பரிசு வடிவமைக்கப்பட்டுள்ளது.