காயத்தில் இருந்து மீண்ட பும்ரா ஐபிஎல்-இல் மும்பை அணியுடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் இறுதிப் போட்டியில் காயமடைந்த பும்ரா. இதனையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்ததால் ஐபிஎல்-இல் மும்பை அணியின் முதல் 4 போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இணைந்தாலும் நாளைய போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது.