பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 06) பகல் 12 மணிக்கு திறந்து வைத்த பின்னர் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தரிசன கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்கள் நீராடவும், சுவாமி தரிசனத்திற்கும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.