தங்கம் விலை கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ரூ.2,000 குறைந்ததை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. அது மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, 2011இல் நிலவியதை போல் சற்று இறங்கு முகத்தை சந்திக்கும் எனக் கூறியுள்ள பொருளாதார நிபுணர் சுந்தரி ஜெகதீசன், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதை நிறுத்தியதே இந்த விலை சரிவுக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.