பெண்ணின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய சப்போட்டா விதை

77பார்த்தது
தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி வீரஜக்கம்மாள் 50. விவசாய தொழிலாளி. மருத்துவமனைக்கு சென்ற இவர் மூச்சு திணறலால் 3 ஆண்டுகளுக்கு மேலாக அவதிபட்டு வருவதாக டாக்டரிடம் தெரிவித்தார். பரிசோதித்த மருத்துவர்கள் சி.டி.,ஸ்கேன் மூலம் நுரையீரல் குழாயில் எதோ சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து நுரையீரல் அகநோக்கி கருவி (ப்ரோன்கோ ஸ்கோப்பி) மூலம் நுரையீரல் குழாயில் சிக்கியிருந்த கருப்பு நிறப் பொருளை எடுத்தனர். பின்னர் அது சப்போட்டா விதை என தெரியவந்தது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி