பிரதமர் மோடி ராமேஸ்வரம் பகுதியில் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை திறந்து வைக்க, வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வரவுள்ளளார். இதன் காரணமாக மதுரை மாவட்ட எல்லைக்குள் பிரதமர் வரும்போது விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மோடி மதுரைக்கு வான்வழியாக வருகை தருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.