பாம்பனில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று (ஏப். 06) திறந்து வைக்கும் நிலையில் மண்டபம் வரும் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்கின்றனர். தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவை சேர்ந்த நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரும் வரவேற்கின்றனர்.