தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருவதால் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முதலில் தொண்டையில் வலி ஏற்படும். அது ஓரிரு நாட்களில் காய்ச்சலாகவும், பின்னர் கை, கால் பாதங்களில் கொப்பளம் மற்றும் அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுவது இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும். மூட்டு வலி, உடல் வலி, நீரிழப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் இதில் அடங்கும்.