பீகார் மாநிலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கும் ஒருவருக்கு சுமார் ரூ.2 கோடி வருமான வரி கட்ட சொல்லி ஐடி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை பார்த்தவுடன் அந்த நபர் கலங்கிப் போய்விட்டார். இந்த பிரச்னையைத் தீர்க்க ஒரு வாரமாக வருமான வரித்துறை ஆபீசுக்கு செல்வதாகவும் இருப்பினும் இதில் தீர்வு கிடைக்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். தொழிற்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.