திருச்சூரில் ஏடிஎம்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். அடிக்கடி பணம் நிரப்புவதால் SBI ATM-ஐ குறி வைத்துள்ளனர். கூகுள் மேப் மூலம் எங்கெங்கு எஸ்பிஐ ஏடிஎம் உள்ளது என்பதை கண்டறிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம்-க்கு கிரெக்டா காரில் வந்து கொள்ளையடித்து விட்டு, காரையும், பணத்தையும் கண்டெய்னரில் ஏற்றி சென்று கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தாகவும், அதை தொடர்ந்தே சோதனை நடந்ததாகவும் சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.