மும்பை மால்வானி பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து விவாகரத்து கேட்ட 27 வயதான மனைவியின் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட அந்த பெண், கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கடந்த 3 மாதங்களாக தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், போதைப்பொருளுக்கு அடிமையான அந்த கணவர், ஆத்திரத்தில் தனது காதல் மனைவியின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.