திருப்பூர்: புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்
காங்கேயம் அருகே பொத்தியபாளையம் ஊராட்சியில் ரூ. 70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக் கூட்டத்தை அமைச்சர்கள் மு. பெ. சாமிநாதன், கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர். காங்கேயம் அருகே பொத்திபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது நிதியின் கீழ் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தாராபுரம் ஆர். டி. ஒ. செந்தில் அரசன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத் தலைவர் இல. பத்மநாதன், காங்கேயம் வட்டாட்சியர் மோகனன் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் கே. கே. சிவானந்தன், பொத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், துணை ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், வடிவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.