சிவன்மலையில் குவியலாக ஊசிகள், குட்கா எப்படி வந்தது?

62பார்த்தது
காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பிரசித்தி பெற்றது. கிரிவலப்பாதையில் கீரனூர் சாலை பிரியும் இடத்திற்கு அருகில் உள்ள ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் மோட்டார் அறை அருகே பல்லாயிரக்கணக்கான  பயன்படுத்திய ஊசிகள், மருந்து பாட்டில்கள், தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள், மருத்துவக் கழிவுகளை கொட்டி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயன்படுத்தபட்ட ஊசிகள் போதைக்காக பயன்படுத்தப்பட்டதா, எதனால் ஆள் நடமாட்டம் இல்லாத மலையின் கிரிவலப்பாதையில் வீசப்பட்டுள்ளது. ஒருவேளை போலி மருத்துவர்கள் யாராவது பயன்படுத்திவிட்டு இங்கு கொட்டி விட்டு  செல்கின்றனரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் இதே பகுதியில் தான் தமிழ்நாடு அரசு அறிவித்த மாவட்ட விளையாட்டு மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இங்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வரும் விளையாட்டு வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது என்கின்றனர். இது குறித்து பக்தர்களின் கோரிக்கையாக மலையின் கிரிவலப்பாதையில் சிசிடிவி பொருத்தி சமூகவிரோதிகளை கண்டறிய வேண்டும்  என்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை  அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி