தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காங்கேயம் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பருவ மழைக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி அரசால் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்கு தங்க செல்ல வேண்டும். செல்லும் போது பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரொட்டி, பிரட், கெட்டு போகாதா உணவு பொருட்களை எடுத்து செல்லவேண்டும் என தெரிவித்தார்கள். வெள்ளநீர் வடிந்தவுடன் ஒருநாட்களில் வீட்டிற்கு திரும்ப சென்றவுடன் வீட்டுக்குள் வெள்ள நீர் வடிந்து விட்டது என்று கவனிக்க வேண்டும் சுவர்கள் விரிசல் விட்டுள்ளது என கவனிப்பதுடன் வெள்ளநீரில் விஷசந்துக்கள் ஆனா பாம்பு, பூரான், தேள் உள்ளனவா என்பதை கவனிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். தீயணைப்புத்துறையினரின் உதவிகள் தேவைப்பட்டால் 04257 - 220310 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பேரிடர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் மோகனன் தலைமை தாங்கினார். காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர் வேந்தன், காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.