முத்தூர் பேரூராட்சி ஸ்ரீராம் நகர், கரட்டுப்பாளையம், பாரதி வீதி, வெங்கமேடு ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 84 லட்சம் மதிப்பில் தார் சாலை பலப்படுத்தும் பணி என மொத்தம் 3 கோடி 60 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். ஈரோடு பிரகாஷ் எம்பி, முத்தூர் பேரூராட்சி தலைவர் சுந்தராம்பாள், துணைத்தலைவர் அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்து கொண்டு புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.