மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அபிபுல்லாகான், மனைவி சினாகான் அபிபுல்லாகான் தனது மனைவி குழந்தையுடன் சிவன்மலை ஊராட்சி, சிக்கரசம்பாளையத்தில்
தேங்காய் களத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இந்த வேலையை விட்டுவிட்டு குடும்பத்துடன் நாம் நமது ஊருக்கே சென்று விடலாம் என தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஊருக்குச் செல்லலாம் என குடும்பத்துடன் கிளம்பியுள்ளனர். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு பின்னர் மேலே இருந்து கற்களை வீசி விட்டு தனது குழந்தையுடன் ஊருக்கு சென்றுள்ளார்.
தண்ணி இல்லாத கிணற்றுக்குள் காயங்களுடன் கடந்த மாதம் 29ம் தேதி முதல் 5ம் தேதி வரை 7 நாள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணின் குரலை கேட்டு அருகில் இருந்தவர் ஓடி வந்து எட்டிப் பார்த்து காங்கேயம் காவல்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை கயிறு கட்டி கிணற்றுக்குள் உள்ளே சென்று காயங்களுடன் உயிருக்கு போராய பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் கொடுத்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து கொல்கத்தாவில் தலைமைறைவாக இருந்த அபிபுல்லாகாணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.