திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவர் 16 வயது மாணவி இடம் ஆசை வார்த்தை கூறி அவனாசி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்டு விசாரித்தனர். அப்போது அந்த மாணவியை கார்த்தி மேட்டூர் அழைத்துச் சென்றதாகவும் அங்கு தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை அடுத்து காவல்துறையினர் கார்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர.