காங்கேயம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

61பார்த்தது
காங்கேயம் நகராட்சியை முற்றுகையிட்ட 5வது மற்றும் 10 வது வார்டு பொதுமக்கள். சாக்கடை மேல் கட்டப்பட்ட சுவற்றை அப்புறப்படுத்த கோரிக்கை


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி 5 வது வார்டு மற்றும் 10வது வார்டு பகுதிகளில் சாக்கடை நீர் குடியிருப்பு வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் தெருக்களில் ஓடிய சாக்கடை நீரால் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புகார் கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு. மேலும் பழைய சாக்கடை மீது திட்டமிடாமல் கட்டப்பட்ட சுவற்றால் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் வீடுகளிலும், வீதிகளிலும் பெருக்கெடுத்து ஓடி துர்நாற்றம் வீசுவது உடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவித்திருந்த  நிலையில் காங்கேயம் நகராட்சி அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி